காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமங்கலம் ஊராட்சியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமங்கலம் ஊராட்சியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திருமங்கலம் ஊராட்சி தலைவராக D.அன்பு என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சிறப்பாக தலைவர் பணியாற்றி வந்த நிலையில் திடீரென 16/1/2023 அன்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இதைத்தொடர்ந்து திருமங்கலம் தலைவர் பதவி காலி என்று அறிவிக்கப்பட்டது. 30வருடங்களுக்கு பிறகு பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்களுக்காக Reservation தொகுதி என்று அறிவிக்கப்பட்ட இந்த தொகுதியில் கடந்த ஒரு வருடமாக தேர்தல் நடத்தப்படாததால் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் தலைவர் பொறுப்பில் உள்ளார்.இதனால் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவியை மற்றொருவர் பதவி வகித்து வருவதையும் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி பொதுமக்கள் பலரும் தமிழக அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்ககும் மனு கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த ஊரைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் S.I.ஷாருக்குமார் வாதிட்டார். இது குறித்து ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...