குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி ரமணா முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர்க்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல் இன்று வழங்கபடவில்லை…

குற்றப்பத்திரிகை நகல் இன்னும் தயாராக வில்லை என்பதால் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு…

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்கு பதிவு…

ஏற்கனவே 2020 ஆண்டு தாக்கல் செய்த குற்றபத்திரிகையில் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றபத்திரிகை சிபிஐ தாக்கல் செய்தது.

தற்போது கூடுதல் குற்றபத்திரிகையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல்..

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, டாக்டர் சி.விஜயபாஸ்கர்
சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், வணிக வரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்த எஸ்,கணேசன், சுகாதாரத்துறை அதிகாரிகளான டாக்டர். லக்ஷ்மி நாராயணன், காவல்துறை உதவி ஆணையராக பதவி வகித்த ஆர். மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக பதவி வகித்த வி.சம்பத் , சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்ட 21 பேர் கூடுதல் குற்றபத்திரிகையில் சேர்ப்பு..

குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜரான நிலையில் விசாரணை செப்டம்பர் 23 தள்ளிவைப்பு –

எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி சி.சஞ்சய் பாபா உத்தரவு…

You may also like...