கைதிகள் வழக்கு hcp bench order prisoner case

நாகையை சேர்ந்த கைதி திருச்சி சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் கைதியின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

……………………………………………..

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த  தினேஷ் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தாய் செங்கையம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், கோவை சிறையில் கைதிகள் – வார்டன்கள் மோதல் குறித்து வெளியான செய்தியை பார்த்து தங்கள் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மானிடம், மகனை சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி தினேஷை சந்தித்த போது, அவர் வார்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டதும், பலத்த காயமடைந்த நிலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாததும் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது மகன் உள்பட ஏழு விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்துள்ள தனது மகனுக்கு உரிய சிகிச்சை வழங்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் நதியா ஆஜரானார். அப்போது, இந்த விவகாரத்தில் முழு தகவல் தெரிய வேண்டுமென்றால்  நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரினார்.

7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களது வயிற்றில் பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்
காவல்துறை வழக்கறிஞர் கூறினார்.

இதனையடுத்து, 7 பேரின் உடல் நிலை குறித்து விரிவான
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

You may also like...