கோபம் CJI

  • வழக்கறிஞர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தலைமை நீதிபதியை கோபத்திற்கு உள்ளாக்கியது.
  • இதனால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்சரித்தார்.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கமான அலுவல்கள் நடைபெற்றன. அப்போது, மனு ஒன்றை விசாரிப்பது தொடர்பாக வக்கீல் ஒருவர் தனது குரலை உயர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் அதிருப்திக்கு உள்ளானார்.

இதையடுத்து, நீதிபதி சந்திரசூட், அந்த வழக்கறிஞரை கடுமையாக எச்சரித்தார். அப்போது நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

ஒரு நொடி பொறுமையாக இருங்கள். நீங்கள் நாட்டின் முதன்மையான நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டில் வாக்குவாதம் செய்கிறீர்கள். உங்கள் சத்தத்தை குறைக்கவும். இல்லையென்றால் உங்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். நீங்கள் வழக்கமாக எங்கு ஆஜராவீர்கள்? ஒவ்வொரு முறையும் நீதிபதியிடம் இப்படித்தான் முறையீடுவீர்களா?

கோர்ட்டில் கண்ணியத்தை கடைப்பிடிப்பது அவசியம். உங்கள் குரலை உயர்த்திப் பேசி எங்களை அதட்டி பார்க்கலாம் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்.

23 ஆண்டுகளில் இப்படி ஒருபோதும் நடைபெற்றது இல்லை. எனது பணிக்காலத்தில் கடைசி ஆண்டில் இப்படி நடக்கக்கூடாது என தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் கண்டனத்தால் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் அவரிடம் மன்னிப்பு கோரினார்.

You may also like...