சத்தியதேவ் லா அகாடமி’ தொடக்க நிகழ்வு.. 16.7.2023 அன்று சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் ’சத்தியதேவ் லா அகாடமி’யை தொடங்கி வைத்தார் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின். இந்தியாவில் சட்டத்தொழில் புரிவது சாதாரண மக்களுக்கு எளிதான காரியம் அல்ல. 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வழக்கறிஞர் தொழிலில் கோலோச்சிய ஆங்கிலேய பாரிஸ்டர்களை ஓரங்கட்டி இந்திய வக்கீல்கள் முன்னேறினர். அப்படிப்பட்டவர்கள் ஒரு சில சமூகம், குடும்பங்களை சார்ந்தவர்களே. 1961-ம் வருடம் ’அட்வகேட் சட்டம்’ இயற்றப்பட்ட பின்னரே வழக்கறிஞர் தொழில் ஒருமுகப்படுத்தப்பட்டு சட்டப்படிப்பு பரவலாக்கப்பட்டது.

’சத்தியதேவ் லா அகாடமி’ தொடக்க நிகழ்வு..
16.7.2023 அன்று சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் ’சத்தியதேவ் லா அகாடமி’யை தொடங்கி வைத்தார் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின்.
இந்தியாவில் சட்டத்தொழில் புரிவது சாதாரண மக்களுக்கு எளிதான காரியம் அல்ல. 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வழக்கறிஞர் தொழிலில் கோலோச்சிய ஆங்கிலேய பாரிஸ்டர்களை ஓரங்கட்டி இந்திய வக்கீல்கள் முன்னேறினர். அப்படிப்பட்டவர்கள் ஒரு சில சமூகம், குடும்பங்களை சார்ந்தவர்களே. 1961-ம் வருடம் ’அட்வகேட் சட்டம்’ இயற்றப்பட்ட பின்னரே வழக்கறிஞர் தொழில் ஒருமுகப்படுத்தப்பட்டு சட்டப்படிப்பு பரவலாக்கப்பட்டது.
சட்டக்கல்லூரி மாணவர் தேர்வில் இடஒதுக்கீட்டு சமூக நீதி ஏற்பட்ட பின்னரே பல சமூகங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் இத்தொழிலுக்கு வரத்தொடங்கினர். இருப்பினும் முறையான வழிகாட்டுதல், பயிற்சி இன்மையால் இன்னமும் வக்கீல் தொழிலில் ஒரு சிலரின் தனிப்பட்ட செல்வாக்கே உள்ளது. பல தனியார் சட்டக்கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகங்கள் வந்த பிறகு மறுபடியும் சட்டப்படிப்பு சாதாரண குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு சவாலாக மாறி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று அரசு சட்டக்கல்லூரிகளில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பல சட்டக்கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லாமையால் அவர்களால் திறம்பட சட்டம் கற்று முன்னேற முடியவில்லை. சட்டக் கல்வி போதனையில் ஏற்பட்ட இந்த வெற்றிடத்தை குறைக்கும் வகையில் ”சத்தியதேவ் லா அகாடமி” தொடங்கப்பட்டுள்ளது.
சட்ட நிபுணர்கள்/ சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்களைக் காணொளியில் பதிவு செய்யப்பட்டு ”யூ டியூப்” வலைதளத்தில் ஒன்றில் பதிவேற்றப்படும். மாணவர்கள் அவற்றை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம். பாடத்திட்ட காணொளி தயாரிப்பதற்கான நிதியை ’ஜெய்பீம்’ படத்தயாரிப்பாளர் சூர்யா அவர்களின் ’2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் வழங்க முன்வந்திருக்கிறது.
இது தவிர அகாடமியின் வழியாக, மாவட்டத்திற்கு ஒருவர் என சட்டம் பயின்ற இளம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓராண்டு முறையான சட்டத்தொழில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் ரீதியாக அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கு “சத்தியதேவ் லா அகாடமி” போதுமான வழிகாட்டுதல் வழங்கும். சட்டப்புலமை பெற்று, சமூகநீதி ஒழுகும் சட்ட அறிஞரின் சிறப்புரை ஆண்டுதோறும் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு, அகாடமியின் இயக்குனராக கௌரவப் பொறுப்பு வகித்து அதை வழிநடத்துவார்.
16.7.2023 அன்று, தேதி ஓய்வு பெற்ற நீதிபதிகள் K P சிவசுப்பிரமணியன், K சந்துரு, திரைப்படக் கலைஞர் சூர்யா, 2டி நிறுவன சி.இ.ஓ. ராஜ்சேகர பாண்டியன், ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோர் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ’சத்தியதேவ் லா அகாடமி’ அடையாள சின்னத்தை (LOGO) அறிமுகப்படுத்தினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னுதாரண நீதிபதியாக பணியாற்றி நேர்மை தவறாமல் நீதி வழங்கியவர் நீதிபதி சத்யதேவ். அவர் நினைவாக தொடங்கப்படும் அமைப்பை தொடங்கி வைத்து வாழ்த்திய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.

You may also like...