சின்னத்திரை நடிகை மகாலஷ்மியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரின் ஜாமீன் judge அல்லி

சின்னத்திரை நடிகை மகாலஷ்மியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரின் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானார்.

இவர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அதில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலாம அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறி தன்னை திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாகக் கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 7ம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உரிமையியல் பிரச்னை எனவும், முறையாக விசாரணை நடத்தாமல், தனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தான் தயாரித்த படங்கள் வெளியானால் இந்த பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 நாட்களாக சிறையில் உள்ள தனக்கு பல்வேறு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு  விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

You may also like...