சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்புடையதாக இல்லை. குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.  எனவே, ஆனந்த், அபினேஷ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும்

சென்னை, செப்.16-

சென்னையில் இருந்து, ரயில் வாயிலாக தேனிக்கு 26 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இருவருக்கு, தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் இருந்து, தேனிக்கு ரயிலில் 26 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த முருகன்,60, உத்தமபாளைம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஆனந்த்,23 மற்றும் அபினேஷ்,22 ஆகியோரை, 2020ம் ஆண்டு பிப்.,29ல், எழும்பூர் ரயில் நிலையத்தில், சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின், அவர்கள் வைத்திருந்த சாக்கு பைகளில் இருந்த 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது, முருகன் இறந்ததால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்புடையதாக இல்லை. குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.  எனவே, ஆனந்த், அபினேஷ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்

You may also like...