சுப்பையா தரப்பில் வக்கீல் பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். சுப்பையா மீதான வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட வயதான பெண் சமரசம் செய்துவிட்டார். அவரும் நீதிமன்றம் வந்து உள்ளார் என்றார்

சென்னை ஆதம்பாக்கம் டாக்டா் சுப்பையா வழக்கில்,நேற்று இரவு நீதிமன்றத்தில் திடீா் திருப்பம்.புகாா் தாரரான பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி,தான் டாக்டருடன் சமரமாகி விட்டதாக வாக்குமூலம்.மாஜிஸ்திரேட் அதை பதிவு செய்து கொண்டு,பொருட்களை சேதப்படுத்திய பிரிவு செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்குட்பட்டது என்பதால்,டாக்டரை மாா்ச் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் மருத்துவர் சுப்பையா சண்முகம்(58). இவர் புற்று நோய் நிபுணர்.

மேலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராக இருந்து வந்தார்.

அதே குடியிருப்பில் வசித்து வரும் வயதான பெண்மணி ( சந்திரா ) என்ற ஒருவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. பெண்மணிக்கு சொந்தமான கார் பார்க்கிங் இடத்தில் தொடர்ந்து மருத்துவர் சுப்பையா சண்முகம் காரை நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வயதான பெண்மணிக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகளை கொடுத்துள்ளார். அதில் உச்ச பட்சமாக பெண்மணியின் வீட்டில் சிறுநீர் கழித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண்மணிக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் அந்த பெண்மனிக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசித்து வந்த உறவினர் பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் போலீசில் கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் 17ந் தேதி புகார் அளித்தார்.

சுப்பையா சண்முகம் பெண்மணி வீட்டில் சிறுநீர் கழிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொரோனா விதிமுறை மீறல், பொருட்கள் சேதப்படுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. புகார்தாரரை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்த நிலையில் அவரை கைது செய்யாமல் போலீசார் இருந்த நிலையில் தற்போது அந்த மூதாட்டி உண்மை நிலையை காவல்நிலையத்தில் புகார் அளித்த வழக்கில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபன், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் வீட்டில் இருந்த டாக்டர் சுப்பையா சண்முகத்தை கைது செய்தனர்.

இதையடுத்து டாக்டா் சுப்பையா சண்முகத்தை நேற்று இரவு ஆலந்தூர் குற்றவியல் நடுவர் வைஷ்ணவி முன் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது சுப்பையா தரப்பில் வக்கீல் பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். சுப்பையா மீதான வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட வயதான பெண் சமரசம் செய்துவிட்டார். அவரும் நீதிமன்றம் வந்து உள்ளார் என்றார். பின்னர் வயதான பெண் சமரசமாக சென்றதாக மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார். இதை பதிவு செய்துக் கொண்ட மாஜிஸ்திரேட்டு பொருட்கள் தேசப்படுத்தப்பட்ட பிரிவுக்கு செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் வருகின்ற 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதனால் ஆலந்தூா் நீதிமன்றம் நள்ளிரவு வரை பரபரப்பாக இருந்தது.

You may also like...