சென்னையிலிருந்து புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் முழுமையாக புறக்கணித்து விட்டதாகக் கூறி, மயிலாடுதுறையை சேர்ந்த பா்ஜ்க்  வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் முழுமையாக புறக்கணித்து விட்டதாகக் கூறி, மயிலாடுதுறையை சேர்ந்த பா்ஜ்க்  வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பல்வேறு புண்ணிய தலங்களுக்கு செல்வதற்கும், வர்த்தக ரீதியாகவும் முக்கியமான இயற்கை எழில் கொஞ்சும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுப்படுத்த வேண்டுமென எந்த கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில், சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டுவது கிழக்கு கடற்கரை சாலையின் சுற்றுச்சூழலை பாதிக்கும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்

கிழக்கு கடற்கரை சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சாலையை சரி செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

You may also like...