சென்னை பூந்தமல்லியில் இயங்கி வரும் தூசன் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளிகளில் ஒரு பகுதியினர்

சென்னை பூந்தமல்லியில் இயங்கி வரும் தூசன் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளிகளில் ஒரு பகுதியினர் 06.05.2022 அன்று மாலை 6.00 மணிக்கு குமணன் சாவடி பேருந்து நிலையம் அருகில் 2022 ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பளம் கேட்டு போராட்டம் நடத்தினர். தொழிலாளிகளை விசாரணை செய்ததில் தங்களது பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் சில விவரங்களை கூறினார்கள்.
தூசன் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு 2022 ஏப்ரல் மாதத்திற்குரியசம்பளம் வழங்கப்படவில்லை என்றும், பிரச்சினைகள் சம்பந்தமாக நிர்வாகத்துடன் நேரடி பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடைபெறறு் கொண்டிருக்கும் இத்தருணத்தில் சம்பளம் வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றது என்றும், புதியதாக ஆர்டர்கள் ஏதும் வர வாய்ப்பில்லை என்றும், நிறுவனம் தொடர்ந்து 5 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் தெரிவித்தனர். நிர்வாகம் நிதி நிறுவனங்களுக்கும், சப்ளையர்களுக்கும் கடன்களை திரும்பத் தருவதற்கு சிரமப்பட்டு வருகிறது. நிலக்கரியால் இயங்கும் கொதிகலன்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இனிமேல் ஆர்டர்கள் வர வாய்ப்பில்லாத காரணத்தால் தொழிற்சாலையை மூட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நிலவி வரும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஒரு சுமுகமான முடிவு ஏற்படுத்துவதற்கு தொழிலாளர் துறை தலையிட வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர்

You may also like...