ஜனவரி 4ம்தேதி அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடரும் உச்சநீதிமன்றம் உத்தரவு!* by inbadurai mhc adv

*ஜனவரி 4ம்தேதி அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடரும் உச்சநீதிமன்றம் உத்தரவு!*

கடந்த ஜுன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – கிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர்கள் மறைவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் முழு அமர்வின் முன் இன்று காலை 10: 30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றதால் உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளிலும் வழக்கு விசாரணை சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.

50 வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்த அதிமுக பொதுக்குழு வழக்கு வரிசைகிரமப்படி மாலை 3:55க்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வழக்கின் அவசரத்தன்மை குறித்தும் பொதுக்குழு தீர்மானங்களை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்று தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக்காட்டி வாதிட்டனர்.

மாலை 4 மணியுடன்நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்ததால் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற குளிர்கால விடுமுறைக்கு (17.12.22 முதல் 2.1.23 வரை) பிறகு வரும் ஜனவரி 4ம்தேதி மதியம் 2 மணிக்கு தொடர்வதாக கூறி அன்றைய தினம் வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

 

*ஐ.எஸ்.இன்பதுரை*

கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்

You may also like...