தனியார் பள்ளிகளின் கட்டடங்கள் வரைபட அனுமதி சம்பந்தமாக இன்று பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் வீட்டு வசதி துறையின் செயலாளர் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடந்தது

தனியார் பள்ளிகளின் கட்டடங்கள் வரைபட அனுமதி சம்பந்தமாக இன்று பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் வீட்டு வசதி துறையின் செயலாளர் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனியார் பள்ளிகளின் இயக்குனர் திரு பழனிச்சாமி அவர்கள் அனைத்து மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர்களுக்கு விவர படிவம் அனுப்பி உள்ளார் அதாவது எந்தெந்த பள்ளிகள் எந்தெந்த காலகட்டத்தில் எது மாதிரியான கட்டிட வரைபட அனுமதி பெற்றன 2011க்கு பின்னர் அனுமதி பெறப்படாத கட்டிடங்கள் இவற்றில் நகரப் பகுதியில் கிராமப் பகுதிகள் அதாவது திட்டமிடப்பட்ட பகுதிகள் திட்டமிடப்படாத பகுதிகள் என அனைத்து வகை பகுதிகளிலும் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு முழு விவரங்களை தனியார் பள்ளி இயக்குனரகம் கேட்டிருக்கிறது கடந்த சில தினங்களுக்கு முன்னால்இது சம்பந்தமாக அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் தலைமை நீதிபதி அவர்கள் 3 வாரத்திற்குள் இது சம்பந்தமாக பதில் அளிக்க வேண்டும் என அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இதற்கிடையில் தமிழக அரசின் சார்பில் கல்வித்துறை வட்டாரத்தில் இந்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You may also like...