தன் மீது அவதூறு பரப்பியதாக, ரூ.5 கோடி கேட்டு வீட்டு உரிமையாளருக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

[18/08, 16:47] sekarreporter1: “யுவன் சங்கர் ராஜா(கோப்புப்படம்) 
தமிழ்நாடு
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்
DIN
Published:18th Aug, 2024 at 12:06 PM
Updated:18th Aug, 2024 at 12:06 PM
ரூ. 20 லட்சம் வாடகை தராமல் மோசடி செய்துவிட்டதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பிரபல இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய மகனுமான யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடைகைக்கு குடியிருந்து வந்தார்.

Also read:
நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா

2018 முதல் அங்கு வசித்து வந்த யுவன் கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 20 லட்சம் வாடகை பாக்கி தரவில்லை என உரியமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Also read:
சொல்லப் போனால்… டாப் 10 – பணக்காரர் ஆவது எப்படி?
அதில், வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்ததாகவும், போனில் தொடர்புகொண்டாலும் பதில் அளிக்காமல் வீட்டை காலி செய்துவிட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இதுகுறித்து யுவன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.5 கோடி கேட்டு யுவன் நோட்டீஸ்

தன் மீது அவதூறு பரப்பியதாக, ரூ.5 கோடி கேட்டு வீட்டு உரிமையாளருக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த பிரச்னையை உரிமையியல் ரீதியாகவும், குற்ற ரீதியாகவும் சட்டப்படி சந்திக்க உள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.”
https://www.dinamani.com/tamilnadu/2024/Aug/18/police-complaint-against-yuvan-shankar-raja#:~:text=%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE(%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)%C2%A0,%E0%AE%9A%E0%AE%99%
[18/08, 16:47] sekarreporter1: 👍

You may also like...