https://x.com/sekarreporter1/status/1727293572431712331?t=hkUn4H8HqBu1HojPba0GMg&s=08 தமிழக தலைமை குற்றவியல் வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதி மன்றம் judge jegathes chandra பாராட்டு* judge.ஜெகதிஷ்சந்திரா, வழக்கு சம்பந்தமாக தகவல் கொடுக்க வரும் காவல்துறையினர் வழக்கைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கொடுப்பதை சுட்டிக்காட்டினார். அதனால் ஏற்படும் விளைவுகளை அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சந்திக்கிறார்கள் என்றார்

*தமிழக தலைமை குற்றவியல் வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு*

தமிழக முன்னாள் கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ் மீதுதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக தலைமை குற்றவியல் வழக்குறைஞர் அசன் முகம்மது ஜின்னா, இந்த வழக்கில் விசாரிக்க வேண்டிய சாட்சிகள் மற்றும் பரிசீலிக்க வேண்டிய ஆவணங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால் காலதாமதம் எற்படுவதாக குறிப்பிட்டார். மேலும் முதல் நிலை விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழக தலைமை குற்றவியல் வழக்குறைஞர் அசன் முகம்மது ஜின்னா, அனைத்து அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுக்கும் காவல் துறையினர் வழக்கு சம்பந்தமாக தகவல் கொடுக்க வரும்போது காவல் துறையினரை கண்ணியமாக நடத்த வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பியதை சுட்டிக்காட்டி பாராட்டினார்.

அதற்கு அசன் முகம்மது ஜின்னா, பொதுமக்களோ அல்லது வழக்கறிஞர்களோ காவல் நிலையத்திற்கு செல்லும்போது காவல்துறையினர் தங்களை எவ்வாறு கண்ணியத்துடன் நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களோ அதுபோன்று வழக்கு சம்பந்தமாக தகவல் கொடுக்க வரும் காவல்துறையினரை அரசு வழக்குரைஞர்கள் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றார்.
அப்பொழுது நீதியரசர் திரு ஜெகதிஷ்சந்திரா, வழக்கு சம்பந்தமாக தகவல் கொடுக்க வரும் காவல்துறையினர் வழக்கைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கொடுப்பதை சுட்டிக்காட்டினார். அதனால் ஏற்படும் விளைவுகளை அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சந்திக்கிறார்கள் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த தமிழக தலைமை குற்றவியல் வழக்குறைஞர் அசன் முகம்மது ஜின்னா, காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்புக் கோர்ட் செல் (Court Cell) அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் குழுவானது தினமும் அரசு தலைமை வழகக்குரைஞர் அலுவலகத்திற்கு காலையும் மாலையும் வந்து வழக்கு சம்பந்தமான தகவல்கள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்றும் அந்தந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் வந்துள்ளனர்களா என்றும் கண்காணித்து உறுதி செய்து வருகின்றனர் என்பதைத் தெரிவித்தார்.

மேலும் காவல் துறையினர் உரிய தகவலையோ அல்லது தவறான தகவலை அளித்தால் காவல்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்று அரசு வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார். இதனையடுத்து மேற்படி வழக்கானது 22.11.2023-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

You may also like...