தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்தை போட்டு ஆடு வெட்டிய விவகாரத்தில் மூன்று நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்தை போட்டு ஆடு வெட்டிய விவகாரத்தில் மூன்று நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார் அதனை கொண்டாடும் வகையில் திமுகவினர் ஆங்காங்கே குறிப்பாக கிருஷ்ணகிரியில் ஆட்டின் தலையில் அண்ணாமலை அவர்களது புகைப்படத்தை போட்டு நடுரோட்டில் ஆட்டின் கழுத்தை வெட்டி அதன் ரத்தத்தை ரோட்டில் தெளித்து அண்ணாமலை பலியாடு வெட்டப்பட்டது என கோஷமிட்டு கொண்டாடினர் . அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனை ஆதரிக்கும் வகையில் தமிழக மந்திரிகள் டிஆர்பி ராஜா உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆதரித்து பேசி இருந்தனர். விமான நிலையத்தில் ஆட் டை மந்திரிக்கு பரிசாக வழங்கினர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பாஜக வழக்கறிஞர் ஏற்காடு A மோகன்தாஸ் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஏற்கனவே மனு அனுப்பி இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கை பரிசிளிக்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்து தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவானது இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அவர்கள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது. மனுதாரர் சார்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி ஆஜராகி இந்த வழக்கு முதன்முறையாக விசாரணைக்கு வந்த போது முந்தைய பொறுப்பு தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என வினா எழுப்பி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார் எனவும் தற்போது தமிழக அரசும் காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் கேள்வி எழுப்பினார். அதனை அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை சம்பந்தப்பட்ட மூன்று நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது என ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு இரண்டு வார காலம் தள்ளி வைத்து உத்தரவிட்டது.

You may also like...