தயாநிதிமாறன் வழக்கு for dayanithimaran வக்கீல்கள் விவாகானந்தன் விமல் எடப்பாடியார் சார்பில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்பதுரை பாலமுருகன் அய்யப்பராஜ் தமிழ்செல்வன் ஆகியோர் ஆஜராகினர்.

தயாநிதி மாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னையில் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்று தயாநிதி மாறன் ஆஜராகுவதற்காக வழக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் வழக்கை தொடுத்த தயாநிதி மாறன் இன்றும் ஆஜர் ஆகவில்லை! நீதிபதி இது குறித்து மனுதாரர் ஏன் ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பிய போது அடுத்த விசாரணையின் போது தயாநிதி மாறன் கண்டிப்பாக ஆஜராவார் என அவரது வழக்கறிஞர் விவேக் நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளித்தார்.ஏற்கனவே கடந்த முறை நடந்த விசாரணையின் பொது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அண்ணன் எடப்பாடியார் தரப்பில் விசாரணையின்போது ஆஜராக சிறப்பு விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுவிற்கு தங்கள் தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை என தயாநிதி மாறன் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டது. தயாநிதி மாறன் ஆஜராகுவதற்காக வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 25ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் சார்பில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்பதுரை பாலமுருகன் அய்யப்பராஜ் தமிழ்செல்வன் ஆகியோர் ஆஜராகினர்.

You may also like...