தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு. அரசுக்கு ஆட்டோ கட்டண. கெடு cj bench order auto fare case

தமிழகத்தில், ஆட்டோ கட்டணங்கள் 12 வாரங்களில் மாற்றியமைக்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும்படி, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க உத்தரவிடக் கோரி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, தொழிற்சங்கங்கள், டிரைவர்கள், நுகர்வோர் அமைப்புக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை, அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், இதுசம்பந்தமாக 12 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, அரசுத்தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார்  தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். அதேசமயம், திருத்தியமைக்கப்படும் கட்டணம் காரணமாக பாதிக்கப்படுவோர், நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

You may also like...