தலைமை நீதிபதி திரு.சஞ்சய் V கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி திரு.P.D.ஆதிகேசவலு அவர்கள் மேற்கண்ட கோவில் பொது அறக்கட்டளையின் கீழ் வராததால் மனுதாரரை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி உரிய பரிகாரம் தேடி கொள்ளுமாறு அறிவுரை கூறி தீர்ப்பளித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சன்டல் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி அவர்கள் S.No.24/10ல் இருக்கும் வடிச்சாயி பச்சையம்மன் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை அகற்ற 17.07.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். மேற்கண்ட மனுவின் மீது நடவடிக்கை இல்லாததால், பெரியசாமி அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

மனுதார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு. E.துரைவையாபுரி அவர்கள் ஊர் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களால் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்படுகிறார்கள் என்று வாதாடினார். மேலும் கோவிலுக்கு சென்று வழிபடுவது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவுகள் 21 மற்றும் 25ன் கீழ் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் உள்ள உரிமையாகும் என்று வாதாடினார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் திரு.ரவீந்திரன் அவர்கள் கோவில் நிலம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ய படவில்லை, அதில் ஒரு சிறிய பகுதி வேளாங்கண்ணி என்ற நபர் ஆக்கிரமிப்பு செய்த்திருக்கிறார் என்று வாதம் எடுத்து வைத்தார்.

ரிட் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி திரு.சஞ்சய் V கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி திரு.P.D.ஆதிகேசவலு அவர்கள் மேற்கண்ட கோவில் பொது அறக்கட்டளையின் கீழ் வராததால் மனுதாரரை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி உரிய பரிகாரம் தேடி கொள்ளுமாறு அறிவுரை கூறி தீர்ப்பளித்தார்.

You may also like...