தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யாமால், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மட்டும் வழக்கு தொடரப்படுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் உணவகங்கள் அமைந்துள்ளதாகவும், அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பயணிகளுக்கும், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகன டிரைவர்கள், ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்களை அமைக்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிடும்படி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதுள்ள உணவகங்களில் கழிப்பறை வசதிகளும் முறையாக வழங்கப்படுவதில்லை இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யாமால், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மட்டும் வழக்கு தொடரப்படுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...