தாய் மொழியை மறந்து விட்ட இனம் சுடுகாட்டில் இறந்து கிடக்கும் பிணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சிமிகு உரையாற்றியுள்ளார்*

*தாய் மொழியை மறந்து விட்ட இனம் சுடுகாட்டில் இறந்து கிடக்கும் பிணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சிமிகு உரையாற்றியுள்ளார்*

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு கோரியும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயின் அருகே, உயர்நீதிமன்ற தமிழ் வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு-சென்னை, சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டமானது கடந்த 1ஆம் தேதி துவங்கி, 8ஆம் தேதி, இன்று மற்றும் நவம்பர் 24 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதிகளில் நடக்கிறது.

இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தொடர் முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் பங்குபெற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில்,

உயர்நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக மாற்றிய வேண்டும் என்பதற்காக 2006ஆம் ஆண்டே இதற்கான போராட்டத்தை வழக்கறிஞர்கள் முன்னெடுத்தனர்.

அனைவரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அப்போதய தமிழக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

தற்போது தமிழும் இல்லை,தமிழனும் இல்லை. தமிழ் ஆட்சி மொழியாக, பேச்சு மொழியாக, வழக்காடு மொழியாக இல்லை. தமிழ் எங்களுக்கு எங்களுக்கு மூச்சு,பேச்சு உரிமை.

செத்துப் போன சமஸ்கிருத மொழியை ஆட்சி மொழியாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

மொழி சிதைந்து அழிந்தால் என் இனம் அழிந்து விடும். மனிதனுக்கு ஜாதி,மதம் அடையாளமில்லை, மொழி தான் என் அடையாளம்.

இந்தி கட்டாயம் படிக்க வேண்டும், பேச வேண்டும் என வற்புறுத்துகிறீர்கள். ஆனால் தமிழை நாங்கள் சொன்னால் மொழி வெறியர்கள் என சொல்கிறீர்கள்.

உலக மொழிகளின் தாய் எங்கள் தமிழ் மொழி. உலக மூத்த மொழிகளிலும், இந்திய மொழிகளின் தொன்மை தமிழ் தான் என பிரதமர் உலகம் முழுவதும் பேசி வருகிறார்.

என் தாய் மொழியில் இருப்பதில் எனக்கு பெருமை. என்னுடைய நிலத்தில் என்னுடைய மொழியான தமிழ் மொழியில் வாதிடவிடு.

இங்கு சாதி,இனம் வாரியாக மாநிலம் பிரிக்கவில்லை. மொழி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. புரட்சி தீ ஒரு புள்ளியில் தான் ஆரம்பிக்கும்.

மாநில அரசுகள் ஒன்றினைந்தது தான் மத்திய அரசு. மாநில அரசு கொண்டு வருவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த கூடாது.

தமிழிலிருந்து பிரிந்து வந்தவைகள் தான் கன்னடம், மலையாளம், தெலுங்கு மாநிலத்தவர்கள் உட்பட பலர் பேசும் மொழி தான் தென் இந்திய மொழிகள்.

50ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இனம் என் இனம். அத்தகைய இனத்திற்கான சிறப்பு கொண்டது தமிழ் மொழி. அத்தகைய இனத்தை பாதுகாக்க, அழிக்கப்பட்டு வரும் நம்முடைய தாய் மொழிக்காக போராடித்தான் ஆக வேண்டும்.

வணிக பயன்பாட்டில் ஆங்கிலம், ஹிந்தி என பல்வேறு மொழிகள் வந்தாலும் அதையும் தாண்டி தமிழ் மொழி நடைமுறையில் பின்பற்ற வேண்டும் என்பதற்காக வைத்திருக்கிறார்கள்.

தமிழில் வழக்காடுவது என்பதற்காக வழக்கறிஞர்கள் போராடுவது அவர்கள் வேலை மட்டுமல்ல. அது அனைவரின் உரிமை.

ஈழத்தமிழ், கச்சத்தீவு என அனைத்து மக்கள் பிரச்சினைகளுக்கும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளனர். அவர்கள் போராடிவருவதற்கு நாம் துணை நிற்போம்.

தற்போது நடைபெறுவது போராட்டம் இல்லை, உரிமைக்கான போர்.

தமிழகத்தில் தமிழ் எழுத படிக்க தெரியா ஒரு குடும்பத்தை நானே பார்த்துள்ளேன். குறிப்பாக பேரறிஞர்கள் குடும்பத்தில் சிலர் தமிழ் மொழி பேச தெரியாமல் உள்ளது மிகுந்த வேதனைக்குறியது.

*தாய் மொழியை மறந்து விட்ட இனம் சுடுகாட்டில் இறந்து கிடக்கும் பிணம்*

ஆங்கிலம் மொழிதானே தவிர அது அறிவு கிடையாது. தமிழில் இல்லாத சொல் எங்குமில்லை. அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளது. வள்ளுவன் குறளில் இல்லாதது வேறு எதிலுமில்லை.

நாம் நினைக்கிறது கிடைக்கும் வரை முயற்சி செய். இழந்திட்ட உரிமையை மீண்டும் பெற்றிட போராடத்தான் வேண்டும். எந்த மொழியையும் கற்போம் நாம் வாழ்வதற்கு. எம் மொழியை கற்போம் நம் இனம் வாழ்வதற்கு. தாய் மொழி கற்கவில்லையெனில் அவன் அறிவற்றவன் தான்.

போராடி பெற்றாக வெண்டும், அதற்கு போராடி வரும் வழக்கறிஞர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். தொடர்ந்து போராடுவோம் வெற்றி பெறும் வரை போராடுவோம் என உரையாற்றினார்.

*பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்*

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டுவர போராடி வரும் வழக்கறிஞர்களுக்கு நாமும் ஆதரவாக துணை நிற்க வேண்டும்.

தாய் மொழியில் வழக்காடும் வாய்ப்பை கொடுக்க வேண்டியது கடமை அதற்காக தான் இந்த போராட்டம்.

உரிமைக்காக போராடுபவர்களோடு நாமும் போராடி அடுத்து வரும் தலைமுறைக்காக அதை கொடுப்போம்.

தி.மலையில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பதிந்துள்ளனர். மனிதர்களை மனிதர்களாக பார்க்க வேண்டும். அரிசி, பருப்பை தொழிற்சாலை உருவாக முடியாது. தொழிற்சாலையால் நாடு வளர்ச்சி என்று சொல்ல முடியாது. போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் போடுவது ஏற்புடையதல்ல. அடிப்படை அறிவு இருப்பவர்கள் செய்யும் செயல் இதுவல்ல. கொடுங்கோல் ஆட்சி தான் அது.

கைது செய்த பின் தான் காரணம் தேடுவார்கள்.
மனிதனை மனிதனாக மதிக்காத நாட்டில் வாழ்ந்து வருவது வேதனைக்குறியது என்று தெரிவித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தை, ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறான அனுகுமுறை. பாஜக ஆளுங்கட்சியாக அல்லாத மாநிலத்தில் ஆளுநரை வைத்து அதிகாரம் செய்ய நினைப்பது தவறான செயலாகும்.

(பேட்டி: சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்)

You may also like...