திருப்பதி திருக்குடை யாக பூஜையில்ஆர்ஆர்.கோபால்ஜி பேசிக்கொண்டிருந்தபோதுபெருமாள் அனுப்பிய சுதர்ஸன சக்கரம்பக்தர்கள் ‘‘கோவிந்தா’’, ‘‘கோவிந்தா’’ என பரவசம்

திருப்பதி திருக்குடை யாக பூஜையில்
ஆர்ஆர்.கோபால்ஜி பேசிக்கொண்டிருந்தபோது
பெருமாள் அனுப்பிய சுதர்ஸன சக்கரம்
பக்தர்கள் ‘‘கோவிந்தா’’, ‘‘கோவிந்தா’’ என பரவசம்
*
ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்கடை ஊர்வலம், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, புதன்கிழமை, காலை 10 மணிக்கு, பூக்கடை சென்னை கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. அன்று மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகின்றன.
திருமலை பிரம்மோற்சவத்தில் சமர்ப்பிக்கப்படஉள்ள, திருக்குடை ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்படும் திருக்குடைகளுக்கு ஓட்டேரி பிஜிரா போல் கோசாலையில், செப்டம்பர் 29 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை யாக பூஜைகள் நடந்தன.
அப்போது, யாகத்தில் காட்சி தந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்வாமிகள் மகிமை குறித்து தினமலர் ஆர்ஆர். கோபால்ஜி பேசி கொண்டிருந்தபோது, விழா மேடையில் எழுந்தருளச்செய்யப்பட்ட, வெங்கடேச பெருமாள் திருக்கரங்களில் இருந்த சுதர்ஸன சக்கரம் நழுவி, விழுந்த அதிசயம் நிகழ்ந்தது.
பெருமாளின் அருட்காட்சி தரிசித்த பக்தர்கள், ‘‘ கோவிந்தா’’, ‘‘கோவிந்தா’’ என பக்தி முழக்கம் எழுப்பினர்.
ஆஞ்சநேயர் மட்டுமல்ல, சக்கரத்தாழ்வார் அருளுடனும் இந்த ஆண்டு, ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை உபய உற்சவம் பிரமாண்டமாக நடைபெறும் என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார் ஸ்ரீ ஆர்ஆர் கோபால்ஜி.
விழாவில் நடந்த பக்தி பரவச காட்சி இதோ:

You may also like...