தொழிலதிபர் மீதான வழக்கு பொய்வழக்கா என சிபிசிஐடி எஸ்பி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு * judge sathis kumar

*தொழிலதிபர் மீதான வழக்கு பொய்வழக்கா என சிபிசிஐடி எஸ்பி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு *
காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் சிப்காட்டில் தொழிற்சாலை நடத்தி வருபவர் பிரபு. கடந்த 05.02.2022 அன்று டாஸ்மாக் மற்றும் போலி மதுபானங்களை ஶ்ரீபெரும்பதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பிரபுவின் தொழிற்சாலையில் 4 கார்களில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஶ்ரீபெரும்பதூர் போலிசார் சோதனை செய்து 4 கார்களை கைப்பற்றி பிரபு மீது Tamilnadu Prohibition Act 1937 கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு போலிசாரால் புனையப்பட்ட பொய் வழக்கு, எனவே அதை ரத்து செய்யக்கோரி மனுதாரரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் சம்பவம் நடந்த நாளின் சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சிசிடிவி விடீயோக்களை *தொழிலதிபர் மீதான வழக்கு பொய்வழக்கா என சிபிசிஐடி எஸ்பி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு *
காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் சிப்காட்டில் தொழிற்சாலை நடத்தி வருபவர் பிரபு. கடந்த 05.02.2022 அன்று டாஸ்மாக் மற்றும் போலி மதுபானங்களை ஶ்ரீபெரும்பதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பிரபுவின் தொழிற்சாலையில் 4 கார்களில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஶ்ரீபெரும்பதூர் போலிசார் சோதனை செய்து 4 கார்களை கைப்பற்றி பிரபு மீது Tamilnadu Prohibition Act 1937 கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு போலிசாரால் புனையப்பட்ட பொய் வழக்கு, எனவே அதை ரத்து செய்யக்கோரி மனுதாரரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் சம்பவம் நடந்த நாளின் சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சிசிடிவி விடீயோக்களை பார்வையிட்ட நீதிபதி அவ்வீடியோவில் சாதாரண உடையில் ஒரு கும்பல் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்களை எவ்வித சோதனையும் நடத்தாமல் பலவந்தமாக எடுத்து செல்வது பதிவாகியுள்ளது. எனவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கின் உண்மைதண்மை குறித்து விசாரிக்க சிபிசிஐடி எஸ்பி தலைமையில் விசாரணை செய்து மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என விசாரணையில் கண்டறியப்பட்டால் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடுக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி அவ்வீடியோவில் சாதாரண உடையில் ஒரு கும்பல் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்களை எவ்வித சோதனையும் நடத்தாமல் பலவந்தமாக எடுத்து செல்வது பதிவாகியுள்ளது. எனவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கின் உண்மைதண்மை குறித்து விசாரிக்க சிபிசிஐடி எஸ்பி தலைமையில் விசாரணை செய்து மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என விசாரணையில் கண்டறியப்பட்டால் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடுக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...