நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

வாலி படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகிe சாட்சியம் அளித்தார்

 

வாலி படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான எஸ்ஜே சூர்யா இயக்கத்தில், நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான வாலி என்ற படத்தின் இந்தி உரிமையை போனி கபூர் பெற்றுள்ளார்.

இதை எதிர்த்து
எஸ்ஜே சூர்யா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா வழங்கவில்லை என்றும் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி படத்தின் இந்தி ரீமேக்கை துவங்க இடைக்கால அனுமதி வழங்கியது.

இந்த பிரதான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி கின்ஸ்லி கிரிஷ்டோபர் முன் நேரில் ஆஜராகி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சாட்சியம் அளித்தார்.

சுமார் 2.30நேரம் சாட்சியம் அளித்தார். குறுக்கு விசாரணை முடிவடையாததால் விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

 

 

You may also like...