நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.தனபால் plastic case adj 4 weeks former aag Narmada argued

பொருட்களை அடைப்பதற்கான பிளாஸ்டிக் கவர்களுக்கும் தடையை நீட்டித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து, வினியோகிக்க, தடை விதித்து, 2018ல் தமிழக சுற்றுச்சூழல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் சில விலக்கு கள் அளிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, பொருட்களை உற்பத்தி செய்யும் இடங்களில், அதை அடைத்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பைகளுக்கும் தடை விதித்து 2020 ஜூலை மாதம் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை தொடர்ந்து, 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவில், பொருட்களை அடைப்பதற்கான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கான நிறுவனங்களுக்கு, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர்கள் அனுமதி அளிக்கக் கூடாது எனவும், ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தால், அதை வாபஸ் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தற்போது வழக்கை தாக்கல் செய்துள்ளது. அதன் மனுவில், 2020ல் பிறப்பித்த அரசாணையின்படி, எந்த பொருளையும் பிளாஸ்டிக்கில் அடைக்க முடியாது என்றும், சுற்றுச்சூழல் துறை பிறப்பித்த இந்த உத்தரவு தன்னிச்சையானது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் ஆவின் நிறுவனம் பால் உள்ளிட்ட பொருட்களை அடைப்பதற்கு, பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தப்படுத்த அனுமதிக்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்களை தடுக்கும் வகையில் பாரபட்சமான அரசாணையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணையை ரத்து செய்யவில்லை என்றால், தமிழகத்தில் இயங்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதேபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...