நீதிபதிகள் R.மகாதேவன், P.D.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது அறநிலையத்துறை தரப்பில், அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, கட்டுமானம் மேற்கொள்ள மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மீறி தீட்சதர்கள் செயல்படுவதாக கூறி, அதற்கான புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் மற்றும் திருவாதிரை தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த மூன்றாண்டு வரவு, செலவு விபரங்கள், வருமான வரி தாக்கல் போன்ற விபரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாற்றங்களும், கட்டுமானங்கள் மேற்கொள்வதை தடுக்கவும், கணக்குகளை சமர்ப்பிக்கவும் பொது தீட்சிதர் குழுவுக்கு உத்தரவிட கோரி இந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் R.மகாதேவன், P.D.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது அறநிலையத்துறை தரப்பில், அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, கட்டுமானம் மேற்கொள்ள மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மீறி தீட்சதர்கள் செயல்படுவதாக கூறி, அதற்கான புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்தார்.

மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் 2023:-24 ஆண்டுக்கான வருமானவரி தாக்கலில், 2 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால், திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் தரிசன விழாவின் போது மட்டும், சுமார் 6 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், சட்டவிரோதமாக கட்டுமானம் நடக்கவில்லை, இந்து சமய அறிநிலையத்துறையால் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் மறைமுகமாக தலையிட முயற்சிக்கிறது, தனிப்பட்ட கணக்கு தணிக்கையாளர்கள் கொண்டு வரவு, செலவு தணிக்கை செய்யப்படுகிறது என விளக்கம் அளித்தார். ஆருத்ரா தரிசன வரவு செலவுகளை கவனிக்க தனி அறக்கட்டளை உள்ளது என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், அந்த அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த மூன்றாண்டு வரவு, செலவு விபரங்கள், வருமான வரி தாக்கல் போன்ற விபரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுதினம் தள்ளிவைத்தனர். அன்றைய தினம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை காணொலி காட்சி வாயிலாக நிரூபிக்க வேண்டுமென பொது தீட்சதர்கள் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

You may also like...