நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புத்தர் சிலை தான் என அகழாய்வுத் துறை திட்டவட்டமாக கூறும் நிலையில், அது தலைவெட்டி முனியப்பபர் சிலை என இந்து சமய அறநிலையத் துறை

கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இருப்பது புத்தர் சிலை தான் என்கிற
அறிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை தமிழக அகழாய்வு துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த புத்தர் அமைப்பின் உறுப்பினரான ரங்கநாதன் என்பவர் கடந்த 2011ஆம்ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில், தலைவெட்டி முனியப்பர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அது புத்தர் சிலை என சர்ச்சை எழுந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த சிலை மட்டுமல்லாமல், அங்குள்ள 26 செண்ட் நிலமும் புத்தர் அமைப்புக்கு சொந்தமானது எனவும், எனவே அந்த இடத்தை மீட்டு புத்தர் அமைப்பிடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறை, முதலமைச்சர் தனிப் பிரிவு ஆகியவற்ற்றில் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்கிருப்பது தலைவெட்டி முனியப்பர் சிலையா அல்லது புத்தர் சிலையா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு தமிழக தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அரசு தரப்பில், தலைவெட்டி முனியப்பர் சிலை என கருதி பக்தர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே தொடர அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புத்தர் சிலை தான் என அகழாய்வுத் துறை திட்டவட்டமாக கூறும் நிலையில், அது தலைவெட்டி முனியப்பபர் சிலை என இந்து சமய அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழக அகழாய்வு துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், அங்கிருப்பது புத்தர் சிலைதான் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம் எனவும், ஆனால் புத்தர் சிலைக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவில்

சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இருப்பது புத்தர் சிலை தான் என்கிற
அறிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை தமிழக அகழாய்வு துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த புத்தர் அமைப்பின் உறுப்பினரான ரங்கநாதன் என்பவர் கடந்த 2011ஆம்ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில், தலைவெட்டி முனியப்பர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அது புத்தர் சிலை என சர்ச்சை எழுந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த சிலை மட்டுமல்லாமல், அங்குள்ள 26 செண்ட் நிலமும் புத்தர் அமைப்புக்கு சொந்தமானது எனவும், எனவே அந்த இடத்தை மீட்டு புத்தர் அமைப்பிடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி இந்து சமய அறநிலையத்துறை, முதலமைச்சர் தனிப் பிரிவு ஆகியவற்ற்றில் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்கிருப்பது தலைவெட்டி முனியப்பர் சிலையா அல்லது புத்தர் சிலையா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு தமிழக தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அரசு தரப்பில், தலைவெட்டி முனியப்பர் சிலை என கருதி பக்தர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே தொடர அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புத்தர் சிலை தான் என அகழாய்வுத் துறை திட்டவட்டமாக கூறும் நிலையில், அது தலைவெட்டி முனியப்பபர் சிலை என இந்து சமய அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழக அகழாய்வு துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், அங்கிருப்பது புத்தர் சிலைதான் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம் எனவும், ஆனால் புத்தர் சிலைக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்டுள்ளார்.

You may also like...