நீதிபதி எம்.சுந்தர் நீதிபதி நிர்மல்குமார் அமரும் முன்பு விசாரணை விசாரணைக் விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பாக ஆஜரான மாநில கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி இவர்கள் மீதான குற்றத்திற்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் இவர்கள் மீது குண்ட சட்டம் ரத்து செய்தால் இவர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க நேரிடும் என்றும் நீதிமன்றத்தில் வாதங்களை வைத்தார்

திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டதை ரத்து செய்யக்கோரி வடமாநில கொள்ளையர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஜே.கே ஜுவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடையை உடைத்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது

இது தொடா்பாக கடையின் உரிமையாளர் ஜெயகுமாா் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

கொள்ளை சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் உத்தரவின்பேரில்
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது

கொல்லையில் ஈடுபட்ட நபா்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்திய காவல்துறையினர்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹ்தாப், பத்ருல், திலாகாஸ், முகமது சுப்ஹான் ஆகியோரை மகாராஷ்டிராவில் கைது செய்தது காவல்துறை

பின்னர் அவர்களை நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக தமிழ்நாடுக்கு அழைத்து வரப்பட்டனர்

அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, 25 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

வட மாநில கொள்யர்களான மஹ்தாப் உள்ளிட்ட 4 பேர் அவர்கள் மீது போடபட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் நீதிபதி நிர்மல்குமார் அமரும் முன்பு விசாரணை விசாரணைக் விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பாக ஆஜரான மாநில கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி இவர்கள் மீதான குற்றத்திற்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் இவர்கள் மீது குண்ட சட்டம் ரத்து செய்தால் இவர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க நேரிடும் என்றும் நீதிமன்றத்தில் வாதங்களை வைத்தார்

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி வட மாநில கொள்ளையர்களான4 பேர் மீது போடப்பட்ட குண்டர் திடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

You may also like...