நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்து சமய அறநிலைத்துறையின் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வடபழனி கோவில் சம்பவம்

கோவில்களில் டிக்கட் விற்பனையில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க திடீர் ஆய்வு செய்வதற்காக துணை ஆட்சியர் தலைமையில் நான்கு பறக்கும் படைகள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வடபழனி முருகன் கோவிலுக்கு கடந்த மாதம் சென்றிருந்தபோது, சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக கண்டறிந்து, அதுதொடர்பாக கோவில் செயல் அலுவலரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் ஊழியர்கள் மீது பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்ற நடவடிக்கையை அறநிலையத்துறை எடுத்தது.

இந்த புகார் விவகாரம் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இந்து சமய அறநிலைத்துறையின் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், வடபழனி கோவில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், பக்தர்களுக்கு தரிசன சீட்டு வழங்கும்போது அதன் தொகை மற்றும் சீட்டு எண்ணிக்கை உட்பட அனைத்து விவரங்களையும் தானியங்கி இயந்திரம் மூலம் தமிழில் அறிவிக்கப்படும் என்றும், கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புக்காக 16 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திருத்தனியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில்யில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்கள் மீதான புகார்களை தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1800-425-1757 இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டு, கோவில் வளாகங்களில் ஒட்டப்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தரிசன டிக்கட் விற்பனையில் முறைகேடு நடக்காமல் கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் தலைமையில் நான்கு பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்றும், அவற்றின் அறிக்கைகள் அறநிலையத் துறை ஆணையரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவற்றை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

You may also like...