நீதிபதி ஜி.கே.இளந்திரையன், உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கு முதுகலை வனவிலங்குகள் உயிரியல் படிப்பு முன்னுரிமை படிப்பாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த படிப்பை முன்னுரிமை தகுதி படிப்பில் இருந்து நீக்கிய திருத்தம் அர்சியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி ரத்து செய்து உத்தரவிட்டார். Adv m r jothimaniyan

தமிழக வனத்துறை பணிகளுக்கான பணி விதிகளில் முன்னுரிமை படிப்பான வனவிலங்கு உயிரியல் படிப்பை நீக்கிய திருத்ததை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் அந்த படிப்பை சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

வனத்துறையில் காலியாக இருந்த 79 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2010ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. வனவியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் படிப்புகள் முன்னுரிமை கல்வித் தகுதியாக இருந்து வந்தது.

இந்நிலையில், இதுசம்பந்தமான பணிகள் விதியில் திருத்தம் கொண்டு வந்த அரசு, வனவியலை மட்டும் முன்னுரிமை கல்வித்தகுதியாக நிர்ணயித்து விட்டு, வன விலங்குகள் உயிரியல் படிப்பை நீக்கியது.

இந்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரியும், மீண்டும் வனவிலங்குகள் உயிரியல் படிப்பை சேர்க்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கு முதுகலை வனவிலங்குகள் உயிரியல் படிப்பு முன்னுரிமை படிப்பாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த படிப்பை முன்னுரிமை தகுதி படிப்பில் இருந்து நீக்கிய திருத்தம் அர்சியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், வனத்துறை பணி விதிகளில் வனவிலங்குகள் உயிரியல் படிப்பையும் முன்னுரிமை படிப்பாக நான்கு வாரங்களில் சேர்க்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...