நீதிபதி தண்டபாணி, சேலம் சித்தேஸ்வர திருக்கோவிலை பாதுகாத்து, அங்கு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க அளிக்கப்பட்ட மனு மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

சேலம் சித்தேஸ்வர சுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரிய மனு மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பகுதியில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் கஞ்சமலை அமைந்துள்ளது.

இங்கு சித்தர்கள் சிவனை வழிப்பட்ட சித்தேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இத்திருக்கோவிலுக்கு தினந்தோறும் மட்டுமல்லாமல் பெளர்ணமி, அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பகதர்கள் வருகை தந்து இங்குள்ள சிறிய அருவிகள், நீருற்றுகளில் புனித நீராடி சுவாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப முறையான போக்குவரத்து வசதி, தங்குமிட வசதிகள், உடை மாற்றுவதற்கான வசதிகள் இல்லை என்றும் கோவிலை தூய்மையாக பராமரிப்பதில்லை எனவும் சேலத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி திருக்கோவிலை பாதுகாப்பு, பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கடந்த 2015 ம் ஆண்டு முதல் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சேலம் சித்தேஸ்வர திருக்கோவிலை பாதுகாத்து, அங்கு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க அளிக்கப்பட்ட மனு மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

You may also like...