பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை மற்றும் கடலூரில் உள்ள கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிக்கையை கடந்த பிப்ரவரி 1-ந்தேதி அறக்கட்டளை வெளியிட்டது. இதற்கு கல்லூரி கல்வி இயக்குனரகம் முதலில் கடும் எதிர்ப்பு

நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அறக்கட்டளை சார்பில் மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ், வக்கீல் ஜோதிமணியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நேர்முகத் தேர்வு நடத்த 84 பேராசிரியர்களை சென்னை பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. அதில் 62 பேர் தேர்வு

உதவி பேராசிரியர்கள் பணி

பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை மற்றும் கடலூரில் உள்ள கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிக்கையை கடந்த பிப்ரவரி 1-ந்தேதி அறக்கட்டளை வெளியிட்டது. இதற்கு கல்லூரி கல்வி இயக்குனரகம் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த உதவி பேராசிரியர்கள் நியமனத்தை மேற்கொள்ள ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒரு குழு அமைத்தது.
மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகத்தில் இருந்து நேர்முகத்தேர்வை நடத்த பேராசியரியர்களை நியமிக்க வேண்டும்.

ஆனால், சென்னை பல்கலைக்கழகமும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் நேர்முகத் தேர்வை நடத்த பேராசிரியர்களை நியமிக்க மறுத்து விட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பச்சையப்பா அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தபோது, சென்னை பல்கலைக்கழகம் 3 வாரத்தில் பேராசிரியர்களை நியமிப்பதாக உத்தரவாதம் அளித்தது. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து ஆகஸ்டு 24-ந்தேதி உத்தரவிட்டார்.

இதன்படி, உதவி பேராசிரியர்கள் பணிக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்ய 84 பேராசிரியர்கள் பெயரை சென்னை பல்கலைக்கழகம் நியமித்தது.
ஆனால், நேற்று (திங்கட்கிழமை), இன்று (செவ்வாய் கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள இயலவில்லை என்று 62 பேராசிரியர்கள் இமெயில் மூலம் தகவல் தெரிவித்தனர்.
மீதமுள்ளவர்கள் போன் செய்தும் தகவல் தெரிவித்தனர். இதனால், 3 நாட்கள் நடைபெற இருந்து நேர்முகத்தேர்வு நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு, பச்சையப்பா அறக்கட்டளை கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அறக்கட்டளை சார்பில் மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ், வக்கீல் ஜோதிமணியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நேர்முகத் தேர்வு நடத்த 84 பேராசிரியர்களை சென்னை பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. அதில் 62 பேர் தேர்வு நடத்த வர இயலாது என்று இமெயிலும், மீதமுள்ளவர்கள் போனிலும் தகவல் தெரிவித்து ஒருவர் கூட வரவில்லை. அதாவது நேரடியாக உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தை தடுக்க முடியாமல், மறைமுகமாக தடுக்கின்றனர். அதுமட்டுமல்ல பேராசிரியர்கள் சங்கம், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஐகோர்ட்டு உத்தரவை இஷ்டம்போல் விமர்ச்சித்துள்ளனர். இதையெல்லாம் இந்த ஐகோர்ட்டு கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது. எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
84 பேராசிரியர்களின் நடவடிக்கை கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் விதமாக உள்ளது. பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல், 84 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அவர்களை பணி நீக்கம் செய்யுங்கள். அவர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து இந்த ஐகோர்ட்டில்தான் வழக்கு தொட வேண்டும்.
இவ்வாறு கடும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வை வருகிற 27, 28 மற்றும் 30-ந்தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்வை நடத்த பேராசிரியர்கள் செல்வதை பல்கலைக்கழகம் உறுதி செய்யவேண்டும். அதுகுறித்து அறிக்கையை வருகிற 25-ந்தேதி பல்கலைக்கழம் தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

You may also like...