பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் நாகராஜன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் நாகராஜன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..

கதிர்காமம் ஜுவலர்ஸ் என்ற நகைக்கடையின் நிர்வாக இயக்குனர் பி.அய்யப்பனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வ்ரித்துறை சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான சபிதாராணிவீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2016 பல்லாவரம் வீட்டில் சோதனை நடத்தி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கமும், சில நகைகளையும் கைபற்றினர்.

இதுசம்பந்தமாக வருமான வரித்துறையினர் மதிப்பீடு செய்த நிலையில், பறிமுதல் செய்த நகை, பணத்துக்கு சபீதாராணியின் கணவரும், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜன் தான் பயனாளி எனக் கூறி பினாமி தடைச் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து நாகராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரம்ணியம், பினாமி தடைச் சடத்தின் கீழ் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு மூன்று வாரங்களில் விளக்கமளிக்க நாகராஜனுக்கு உத்தரவிட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...