பிரியாணியில் பல்லி கிடந்ததால் ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிரியாணியில் பல்லி கிடந்ததால் ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிரியாணியில் பல்லி

சென்னை வியாசர்பாடி பெரியார்நகரைச் சேர்ந்தவர் அப்பாஸ் அலி. கடந்த 2022-ம் ஆண்டு இவர், சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது நண்பருடன் பிரியாணி சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது அப்பாஸ் அலி தனக்கு மட்டன் பிரியாணியும், தனது நண்பருக்கு காடை பிரியாணியும் ஆர்டர் செய்துள்ளார். அதன்படி, அவர்களுக்கு சர்வர் பிரியாணி வழங்கி உள்ளார்.

அதனை சாப்பிட்டு முடித்ததும் அப்பாஸ் அலி மேலும் ½ பிளேட் பிரியாணி கேட்டுள்ளார். அப்போது அந்த பிரியாணியில் பல்லி கிடந்துள்ளது.

வாந்து, வயிற்று வலி

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பாஸ் அலி, ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார். இந்தநிலையில் அவர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதைத்தொடர்ந்து அப்பாஸ் அலி சென்னையில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் தனக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், சிகிச்சை செலவுக்காக ரூ.50 ஆயிரமும், மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சமும் வழங்க ஓட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் வினோபா, உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர், ஓட்டல் நிர்வாகத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

You may also like...