மகளிருக்கெதிரான பாலியல் கொடுமை (அ) விதிமுறை மீறல் ஏற்பட்டால் தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்று ஆதரவு கோரலாம்.

SHANMUGA SUNDARAM R:
வணக்கம் நண்பர்களே…!

மகளிருக்கெதிரான பாலியல் கொடுமை (அ) விதிமுறை மீறல் ஏற்பட்டால் தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்று ஆதரவு கோரலாம்.

மத்திய தகவல் ஆணைய உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1Z1dJF1lz2gmaAKOSz2tHS8K5VLamTt8k/view?usp=drivesdk

நன்றி…!

இந்திய தண்டனைச் சட்டத்தில் 506 என்று மட்டுமே உள்ளது. இது மிரட்டுதலுக்கான தண்டனை பற்றி கூறுகிறது. இதில் இரண்டு பத்தி உள்ளது.

முதல் பத்தியில் வெறுமனே மிரட்டல் செய்கிற ஒருவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இது கைது செய்யக்கூடாதது. ஜாமீனில் விடக்கூடாதது. சமரசம் செய்து கொள்ளவும் முடியாது.

இரண்டாவது பத்தியில் அச்சுறுத்தலானது மரணம் அல்லது கொடுங்காயம் முதலியவற்றை ஏற்படுத்துவதாக இருந்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என்று கூறுகிறது. இது கைது செய்யக்கூடியது. ஜாமீனில் விடக்கூடாதது. சமரசம் செய்து கொள்ள முடியாது.

இந்த இரண்டு பத்திகளையும் தான் 506(1) மற்றும் 506(2) என்று கூறுகிறார்கள்.

சுவாதி என்பவரும், ராஜேஷ்குமார் என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள். திருமணத்துக்கு பிறகு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் சுவாதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் கணவர் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி இந்து திருமணச் சட்டம் பிரிவு 9 ன் கீழ் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஆஜரான சுவாதி, கணவர் வசமுள்ள தனது 1200 கிராம் தங்க நகைகள் மற்றும் 18 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்தார். மேலும் விவாகரத்துக்கு சம்மதித்து ஒரு counter claim மனுவும் தாக்கல் செய்தார். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுவாதியின் சீதனப் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று ராஜேஷ்குமாருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தார். மேலும் சுவாதி கோரியபடி விவாகரத்தும் வழங்கி தீர்ப்பளித்தார்.

விவாகரத்து வழங்கியதை எதிர்த்து கணவர் மேல்முறையீடு செய்தார். அதேபோல் சீதனப் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஒரு சீராய்வு மனுவும் தாக்கல் செய்தார்.

இரண்டு மேல்முறையீடுகளையும் ஒன்றாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கணவரின் மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கணவர் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெறுவதற்காக இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதற்கிடையில் சுவாதி கணவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுத்து கணவர் வீட்டை சோதனை செய்ய உத்தரவு வாங்கினார். அந்த உத்தரவின் பேரில் கணவர் வீட்டில் முதல் சோதனை நடைபெற்றது. அப்போது கணவரிடமிருந்து 102 கிராம் தங்க நகைகளும், 6 கிலோ வெள்ளிப் பொருட்களும், இரண்டாவது சோதனையின் போது 123.760 கிராம் தங்க நகைகளும், 6.511 கிலோ வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு கணவரிடமிருந்து எதையும் கைப்பற்ற முடியாததால் மீத பொருட்களை கைப்பற்ற ஏதுவாக குடும்பநல நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த நீதிபதி கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து கணவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து கைது கட்டளையை திரும்ப பெற மனுதாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி கணவர் குடும்பநல நீதிமன்றத்தில் தன் மீதான கைது கட்டளையை திரும்ப பெற வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி தன்னிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களும் தன்னிடம் இல்லை என்று கூறினார். ஆனால் மனைவி கணவரிடமிருந்து நீதிமன்ற உத்தரவுப்படி கைப்பற்றப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக் கொண்ட விவரத்தையும் நிறைவேற்றுதல் மனுவில் கூறாமல் விட்டிருந்தார்.

கணவரின் மனுவை விசாரித்த நீதிபதி கைது கட்டளையை திரும்ப பெறுவதாக கூறி கணவருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து சுவாதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை நீதிபதி V. M. வேலுமணி விசாரித்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி சுவாதிக்கு சொந்தமான மீதி நகைகளை ராஜேஷ்குமார் ஒப்படைக்கவில்லை. அதனால் சுவாதி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதி கணவருக்கு எதிராக கைது கட்டளையை பிறப்பித்துள்ளார். அவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படாதவர்களை உரிமையியல் சிறையில் அடைக்கவும், அவரது சொத்துக்களை ஜப்தி செய்யவும், தொகைக்கு ஏற்ப சொத்தை விற்பனை செய்ய உத்தரவிடவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சட்டம் இவ்வாறு இருக்கையில் கணவருக்கு ஆதரவாக கைது கட்டளையை குடும்பநல நீதிபதி ரத்து செய்தது தவறு. சுவாதி தாக்கல் செய்துள்ள நிறைவேற்றுதல் மனு நிலுவையில் உள்ளது. அதனால் அந்த வழக்கில் சுவாதியின் நகைகளை திரும்ப 18.6.2018 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று ராஜேஷ்குமாருக்கு எதிராக குடும்பநல நீதிபதி பிடி கட்டளையை பிறப்பிக்க வேண்டும். அப்படியும் ராஜேஷ்குமார் நகைகளை ஒப்படைக்கவில்லை என்றால் உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 31 ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி குடும்பநல நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி சுவாதியின் மனுவை அனுமதித்து தீர்ப்பு வழங்கினார்.

Chennai High court

CRP. (NPD). No – 928/2015

Dt – 27.04.2018

சுவாதி என்ற நஜினா Vs P. இராஜேஷ்குமார் பக்மார்

2018-3-LW-841

You may also like...