மணல் குவாரி வழக்கு ponmudy case 7 சாட்சி பல்டி

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், வானூர் அருகே செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2012-ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் வானூர் பொறுப்பு தாசில்தாரும், ஓய்வுபெற்ற துணை ஆட்சியருமான மாணிக்கம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர், வழக்கு தொடர்பான கோப்புகளில், அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், தனக்கு முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்றும் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 7 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். Minister Ponmudi case.

You may also like...