மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, கடந்த வெள்ளிக்கிழமை புழல் சென்று பார்த்த போது கேண்டீன் மூடியிருந்ததாக கூறினார்

Cசென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த  கைதிகளுக்கான கேண்டீன் திறக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் திடீரென கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கேண்டீனை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரி விசாரணை கைதி பக்ரூதின் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், கேண்டீன் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, கடந்த வெள்ளிக்கிழமை புழல் சென்று பார்த்த போது கேண்டீன் மூடியிருந்ததாக கூறினார்.

இதனையடுத்து, கேண்டீன் தற்போது மூடப்பட்டுள்ளதா? அல்லது திறக்கப்பட்டுள்ளதா? என அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...