மனுவை விசாரித்த நீதிபதி என்.செந்தில் குமார், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து சட்டவிரோதமாக கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டார்

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீத உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் , பொதுமக்கள் பயன்படுத்தும் நடை பாதையில் சட்டவிரோதமாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

இது போன்ற சட்டவிரோத கொடிக் கம்பங்கள் தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கோரியும், இது தொடர்பாக உரிய விதிகளை வகுக்கக்கோரியும் இருமுறை அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.செந்தில் குமார், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து சட்டவிரோதமாக கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

You may also like...