மார்டின் மனைவி மனு தள்ளுபடி

மார்ட்டின் லாட்டரி அதிபர் மனைவி லிம்ரோஸ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது-

கோவை வருமான வரித்துறையில் இருந்து எனக்கு நோட்டீசு வந்தது. அதில் என் மீதான வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளை கொல்கத்தா வருமான வரித்துறைக்கு மாற்றப்படுகிறது. அங்கு சென்று கொல்கத்தா வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்என்று கூறியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு கொல்கத்தா வருமான வரித்துறை கோவையில் எனது அலுவலத்தில் ரெய்ட் நடத்திய சில ஆவணங்களை எடுத்து சென்றது. இதை தொடர்ந்து தான் கோவை வருமான வரித்துறை இந்த நோட்டீசை அனுப்பி உள்ளது. கோவை வருமான வரித்துறை தான் என் மீதான வழக்கை விசாரிக்க வேண்டும். கொல்கத்தா வருமான வரித்துறை விசாரிக்க கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். கொல்கத்தாவிற்கு எனது வழக்குகளை மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார் வருமான வரித்துறை சார்பாக வருமான வரித்துறை மூத்த வக்கீல் டாக்டர் பி் ராமசாமி ஆஜராகி, மார்ட்டின் நிறுவனம் லாட்டரி சீட்டுகளை , மேற்கு வங்க மாநிலத்திலும் நாகலாந்து, சிக்கம், பூட்டான் மாநிலங்களிலும் விற்பனை செய்கிறார். தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . எனவே இங்கு லாட்டரிகளை விற்கவில்லை. எனவே மேற்கு வங்க கொல்கத்தா வருமான வரித்துறை தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி மீதான வழக்கை விசாரிக்க முடியும். கோவையில் இருந்து கொல்கத்தாவிற்கு மார்ட்டின் மனைவி வழக்குகளை மாற்றியது சரியானது ,இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு மார்டின் மனுவை தள்ளுபடி செய்தார்.

நீதிபதி, மனுதாரர் மார்ட்டின் மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவில் நடத்துவதுதான் சரியானது. எனவே மார்ட்டின் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.

You may also like...