மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி வழங்கக் கோரி, தயரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக நடிகர் சிவ கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சமரச தீர்வாளர் (Arbitrator) நியமித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 4 கோடி 80 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளதாகவும், அதனை வழங்க பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உத்தரவிட கோரியும், அதுவரை அவரின் தயாரிப்பில் வெளியாக உள்ள பத்து தலை, சீயான் 61, ரீபெல் (rebal) படங்களை இணையதளம் உள்ளிட்டவைகளில் வெளியிட தடை விதிக்க கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர்
ஞானவேல் ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் பல உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவம் மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம், மற்றும் விநியோகிஸ்தர்கள் பிரச்சனை குறித்து வழக்கில் எந்த தகவலும் அளிக்கவில்லை எனவும் எனவே அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், இரு தரப்பு விசாரணைக்கு பிறகு இன்று பிறப்பித்த உத்தரவில் சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை (Arbitrator) நியமித்து பிரச்னை தீர்வு காண உத்தரவிட்டார்.

அதேசமயம், ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எற்க முடியாது என தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தார்.

You may also like...