மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களின் மீது சட்டப்படி 90 நாட்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பாக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Aag j Ravinthiren

[5/4, 17:51] Sekarreporter: தமிழக அரசு சார்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ்
[5/4, 17:51] Sekarreporter: மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களின் மீது சட்டப்படி 90 நாட்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பாக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 66 வயது சதாசிவம் என்பவர், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மகன் மதன், தனக்கு சொந்தமான சொத்து ஆவணங்களை அபகரித்து சென்றதாகக் கூறி, அந்த ஆவணங்களை மீட்டுதரக்கோரியும், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகார் மனுவை பரீசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கடந்த ஆண்டு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பியதுடன், தமிழகம் முழுவதும் வருவாய் கோட்டாசியர்களிடம் நிலுவையில் உள்ள மூத்த குடிமக்களின் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் பல்வேறு வருவாய் கோட்டங்களில் 292 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி அளிக்கபடும் புகார்களின் மீது 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத கோட்டாசியர்கள் பொறுப்பாக்கப்படுவர் என எச்சரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, மீண்டும் ஜூன் மாதம் விசாரணைக்கு வர உள்ளது.

You may also like...