மேல்மலையனூர் – அண்ணா மறுமலர்ச்சி திட்ட டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!*

*மேல்மலையனூர் – அண்ணா மறுமலர்ச்சி திட்ட டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!*

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 15.12.2022 அன்று அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II ல் 24 சிப்பங்களாக மொத்தம் ரூபாய் 4,59,14,700/- மதிப்பீட்டிற்கான வேலைகளுக்கு டெண்டர் நடைபெற்றது. இந்த டெண்டர் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணாக நடைபெறுவதாகவும், தனது இணைய ஒப்பந்தப்புள்ளி ஏற்கபடவில்லை என்பதாலும் டெண்டருக்கு தடை கோரி ஒப்பந்ததாரர் தனம்சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மதியம் 2.15 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் சதீஷ்குமார், மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும், டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தும் வழக்கு விசாரணையை 04.01.2022 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

You may also like...