வடபழனி கோயிலில் நீதிபதியிடம் தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வடபழனி கோயிலில் நீதிபதியிடம் தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். நீதிபதி சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய விரும்பி 3 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளைப் பெற ரூ.150 (தலா ரூ.50) கட்டண வசூல் செய்யும் கோயில் ஊழியரிடம் கொடுத்துள்ளார். ஆனால் ஊழியர் அவரிடம் இரண்டு 50 ரூபாய்க்கான டிக்கெட்டையும், ஒரு 5 ரூபாய்க்கான டிக்கெட்டையும் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கோயில் ஊழியரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, நீதிபதியின் புகாரைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து 2 ஊழியர்களை பணியிட நீக்கம் செய்தும், ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.

டிக்கெட் கவுண்டரில் பணியாற்றிய ரேவதி மற்றும் டிக்கெட் பரிசோதனை செய்த ரவிச்சந்திரன் ஆகியோரை பணியிட நீக்கம் செய்தும், ஆய்வாளர் ஜெயந்தரை மீஞ்சூருக்கு பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...