வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைவழக்கு rskj bench

வடலூர் வடலூர் வள்ளலார் சத்தியஞான சத்தியஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தில் தற்போது வசிப்பவர்கள், உரிமை கோருபவர்களின் விவரங்களை சேகரித்து செப்டம்பர் 19ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரும் 400 தனி நபர்கள் குறித்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து தற்போது அந்த நிலங்களில் வசிப்பவர்கள், உரிமை கோருபவர்களை மட்டும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கும் வகையில் அவர்களின் விவரங்களை சேகரித்து செப்டம்பர் 19ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...