வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள் நேர்மையாகவும் அர்பணியுடனும் செயல்பட வேண்டுமென சிங்க முக நரசிம்ம கடவுளின் கதையை சுட்டிக்காட்டி நீதிபதி எஸ் எஸ் சுந்தர் அறிவுறுத்தியுள்ளார்.

வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள் நேர்மையாகவும் அர்பணியுடனும் செயல்பட வேண்டுமென சிங்க முக நரசிம்ம கடவுளின் கதையை சுட்டிக்காட்டி நீதிபதி எஸ் எஸ் சுந்தர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் சட்டத்துறை மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் இணைந்து நடத்தும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான 3 நாட்கள் நடைபெறும் பயிலரங்கத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எஸ் சுந்தர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கரன், சட்டக் கல்வி இயக்குனக இயக்குனர் பேராசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எஸ் சுந்தர், வழக்காடுவது என்பது ஒரு கலை என்றும் அதை அனைத்து இளம் வழக்கறிஞர்களும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார்.

வழக்கறிஞராக தான் பணியை தொடங்கிய போது, ஆங்கிலத்தில் நீதிமன்றத்தில் பேச தயங்கமும் அச்சமும் இருந்தாகவும், ஆனால் தற்போது அதையெல்லாம் சரி செய்ததால், தற்போது நீதிபதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், கூர்ந்து கவனிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை நீதிமன்றத்தில் நடத்தும் முன், வழக்குகளை எளிமையாக விளக்க அதை கதை போல் சொல்லும் திறமையை வளர்க்கவும், தெளிவான வாதத்தை வைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகளின் கேள்விக்கு உகந்த பதில்களை வழங்கினாலே வழக்கில் விரைந்து தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.

நீதி மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், வழக்கறிஞர் வழக்குகளில் நேர்மையுடன், வெளிப்படை தன்மையுடனும் உண்மைகளை தேட வேண்டும் என குறிப்பிட்ட அவர், வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள், நேர்மையாகவும் அர்பணிப்புடன் செயல்பட வேண்டுமென சிங்க முக நரசிம்ம கடவுளின் கதையை சுட்டிக்காட்டினார்.

You may also like...