வெல்டிங் துறையில் கொட்டி கிடைக்கும் வேலைகள் நவீன தொழில் நுட்பத்துடன் இலவச பயிற்சி

வெல்டிங் துறையில் கொட்டி கிடைக்கும் வேலைகள்

நவீன தொழில் நுட்பத்துடன் இலவச பயிற்சி

சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெல்டிங் துறையில் முன்னணி நிறுவனமான ஃப்ரோனியஸ்(fronious)இந்தியாவில் முதன்முறையாக திறன் மேம்பாட்டு மையத்தை இன்று துவங்கியது. இதனை ஃப்ரோனியஸ் இந்தியாவின் (fronious India ) இயக்குனர் வி.வி.காமத் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

அதன் பின் பேட்டியளித்த சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம் இந்த மையத்தில் வெல்டிங் தொழில்நுட்பத்தில் உள்ள நவீன உபகரணங்கள் இடம் பெற்றுள்ளதாகவும்,ஆண்டுக்கு 500 இளைஞர்களுக்கு உலக தரம் வாய்ந்த வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டு தொழில்துறையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வெல்டிங் நிபுணர்களுக்கு
ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் மட்டும் எரிவாயு நிறுவனங்கள், விமானம் மற்றும் ராக்கெட் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்
உலகளவில் கொட்டி கிடப்பதாகவும், தங்கள் நிறுவனத்தின் மூலமே வேலைக்கு அமர்த்தப்படுவதாக தெரிவித்தார்.

பேட்டி

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம்

You may also like...