வேலுமணி டெண்டர் case state pp Hasan mohamad Ginna கடும் எதிர்ப்பு

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பு கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் ஜெயராம்.வெங்கடேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை திரும்ப பெறுவதாகவும், வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கம், ஆர் எஸ் பாரதி ,மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை அடுத்த 25 ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

அப்போது வேலுமணி தரப்பில், கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணை தொடரந்து நடைபெறலாம் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...