*−ஐ.எஸ்.இன்பதுரை* கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்.

[7/7, 12:11] Inbadura Former i Mla: *செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி வகிக்க தடை கோரிய அதிமுக வழக்கு! விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு!*

செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அமைச்சராக பதவி வகிக்கிறார் என விளக்கம் கேட்டு அவர் பதவி வகிக்க தடைவிதிக்க கோரி முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சார்பில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தாக்கல் செய்த கோவாரண்டோ வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது ஜெயவர்த்தன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி சிறை கைதியாக இருக்கும் செந்தில்பாலாஜி எம்எல்ஏவாக நீடிக்கலாம். ஆனால் அமைச்சராக பதவி வகிக்க முடியாது. அது அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.இது தொடர்பாக பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை ஆதாரமாக கொண்டு தான் வாதிட இருப்பதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இவ்வழக்கில் ஆஜராகிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் அந்த நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வழங்குமாறு கூறியதுடன் அரசு தரப்பின் ஆவண நகல்களை ஜெயவர்த்தன் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்குமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள வேறு இரு மனுதாரர்களுக்கும் இதுபோல நீதிமன்ற தீர்ப்பு நகல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

*−ஐ.எஸ்.இன்பதுரை*

கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்.
[7/7, 12:17] sekarreporter1: 🙏🏽

You may also like...