[05/02, 18:15] sekarreporter1: கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக உள்ளதால், அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள், இலங்கை கடற்படையினர் ஜனவரி 22ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுககும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுவதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்னை குறித்து தீர்வு காண மத்திய – மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசுத் தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது

இதையடுத்து, மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[05/02, 18:15] sekarreporter1: நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில்,
தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டு, அதறகான கால அவகாசத்தையும் நீட்டித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்து, அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன்பே முறையிடும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி, தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
[05/02, 18:15] sekarreporter1: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை அவருக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரும் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் அது விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனவும் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

இதனையடுத்து, அந்த மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டியின் மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அவ்வாறு ஒத்திவைக்கப்படுவதாக இருந்தால் அதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட வேண்டுமென அமர் பிரசாத் ரெட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இது ஒரு பொய் வழக்கு என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரரால் அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள கூட முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
[05/02, 18:15] sekarreporter1: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் காவல் ஆய்வாளரை அறைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த டிசம்பர் 27ம் தேதி ‘ஆருத்ரா’ தரிசன விழாவின் போது பக்தர்களுக்கு இடையூறாக நின்றிருந்த தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவருமான ஸ்ரீதரனை ஒதுங்கி நிற்கும்படி, தேசூர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் காந்திமதி கூறியிருக்கிறார்.

ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், பெண் ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெண் ஆய்வாளர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டுமென நிபந்தனையுடன், ஸ்ரீதரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
[05/02, 18:15] sekarreporter1: சாலை ஓரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லை அகற்ற தாசில்தாரருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து புகார் அளித்த போது, இது உரிமையியல் பிரச்னை என காவல் துறையினர் புகாரை முடித்து விட்டதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சாலையில் ஒரு கல்லை நாட்டி, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

சாலையில் நடப்பட்ட கல், சிலையா? இல்லையா? என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்த நீதிபதி, இதற்காக வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என குறிப்பிட்டு, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[05/02, 18:15] sekarreporter1: Adv pugazhenthi Send this.. Fwd to ur office if needed..
[05/02, 18:15] sekarreporter1: ஸ்ரீஹரன் என்கிற முருகன் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் . அதேபோல் ராபர்ட் பையாஸ் அவர்களும் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் . இன்று மதியம் ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாகி மயக்கம் அடைந்துள்ளார் . இன்று அவர்களை சந்திக்க சிறப்பு முகாமிற்கு வந்தேன் . ராபர்ட் பையாஸ் மயங்கி விழுந்ததால் அவரை சந்திக்க முடியாது என்று முகாம் அதிகாரிகள் கூறிவிட்டனர் . தமிழக முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு சிறப்பு முகாமில் உயிர்க்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் ராபர்ட் பையாஸ் ஆகியோரின் உயிரைக் காக்க வேண்டுகிறேன்

You may also like...