116 judges transfer

judges transfer

சென்னை, மே 8-
சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை உள்பட மாநிலம் முழுதும் உள்ள மூத்த சிவில் நீதிபதிகள் 116 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதில், சென்னையில் மட்டும் 32 மூத்த சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் பி.சந்தோஷ், தர்மபுரி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை, அரியலுார் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் நீதிமன்ற கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் ஆர்.கிரிஜா ராணி, திருச்சி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் ஆர்.தமிழ்செல்வி, வேலுார் கூடுதல் சப் ஜட்ஜ் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி ஜெ.கே.திலீப், ராசிபுரத்துக்கும், பி.தங்கமணி கணேஷ், ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட்டாகவும், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி துணை இயக்குநர் ஆர்.ஏ.எஸ்.ஆனந்த்ராஜ், ஆலந்துார் சப் ஜட்ஜ் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல கோவை, புதுக்கோட்டை, திண்டிவனம், ராசிபுரம், திருத்தணி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள மூத்த சிவில் நீதிபதிகள் 116 பேரை இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

You may also like...