15 days remand pj court order for police spp sudagar for accused adv rc paul kanagaraj argued

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் கைதான இந்து அன்மீக பேச்சாளர் RBVS மணியனை செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் நிர்வாகியான RBVS.மணியன், பட்டியலின பழங்குடியின மக்கள் குறித்து பேசியிருந்தார்.

பட்டியலின, பழங்குடியினர், அம்பேத்கர்,  திருவள்ளுவர் ஆகியோரை பற்றி அவதூறாக பேசியதாக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் இரா. செல்வம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 8 பிரிவுகளில் மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை நான்கரை மணியளவில் மாம்பலம் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதியிடம் விளக்கம் அளித்த மணியன், தனக்கு ட்விட்டர் கணக்கே இல்லை என்றும், எதையும் அதில் பதிவிடவில்லை என்றும், தான் பேசியதில் தவறான புரிதல் காரணமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தன்னுடைய வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனை ஆகிய காரணங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். உடல் நிலையை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, செப்டம்பர் 27ஆம் தேதி வரை மணியனை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

அம்பேத்கர்,  திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், கடந்த 11ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியபோது, திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக மணியன் மீது
விசிக கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார்.

இதனடிப்படையில் மணியன் மீது,
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர் இன்று காலை அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அப்போது மணியனை நீதிமன்ற காவலில் எடுப்பதற்கான மனுவை அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் தாக்கல் செய்தார்.

பின்னர், மணியனிடம் உங்கள் மீதான புகாருக்கு என்ன பதில் விரும்புகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மணியன், தாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் எனது முதுமை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறினார்.

மேலும், தமக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளதாகவும் மணியன் தெரிவித்தார்.

இதனையடுத்து, வரும் 27ம் தேதி வரை மணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதனிடையே, மணியனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி அல்லி கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

 

 

You may also like...